போக்குவரத்து அமைச்சரிடம் பேருந்து சேவை கோரி திமுக செயலாளர் தளபதி முருகேசன் மனு

கோவையில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரை சந்தித்த திமுக செயலாளர் தளபதி முருகேசன், பூரண்டாம்பாளையம் முதல் பொள்ளாச்சி வரை 5 பேருந்துகள் இயக்க கோரிக்கை மனு அளித்தார்.


கோவை: கோவையில் புதிதாக 21 பேருந்து சேவைகளை துவக்கி வைக்க வருகை தந்த தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரை சந்தித்து திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

இன்று (ஜூன் 17) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் பூரண்டாம்பாளையம் பிரிவிலிருந்து செஞ்சேரிமலை வழியாக செல்லும் 5 பேருந்துகளை பொள்ளாச்சி வரை இயக்க வேண்டும் என்று தளபதி முருகேசன் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம் உடன் இருந்தார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பூரண்டாம்பாளையம் மற்றும் செஞ்சேரிமலை பகுதி மக்களின் போக்குவரத்து தேவைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...