ஆழியார் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது: விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சியில் உள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் 101 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் கிடுகிடுவென உயர்ந்து 101 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதனை அடுத்து அங்கிருந்து உபரி நீர் ஆழியார் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.



நேற்று காலை 95.80 அடியாக இருந்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி 101.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5.3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு தற்போது வினாடிக்கு 3,814 கன அடி நீர் வரத்து உள்ளதாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை நீடித்தால் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என்றும் அவர்கள் கூறினர்.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நீர் இருப்பு வரும் காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...