பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம்: கோவை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் காரீப் பருவத்திற்கான பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் அறிவிப்பு. பல்வேறு பயிர்களுக்கான காப்பீட்டு விவரங்கள், கட்டண விபரங்கள் மற்றும் காலக்கெடு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.764, உளுந்து மற்றும் பச்சைப் பயறு பயிர்களுக்கு ரூ.308 என்ற விகிதத்தில் காப்பீட்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கான காப்பீட்டின் கடைசி தேதி 31.07.2024 ஆகும். மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.744, சோளத்திற்கு ரூ.245, கொள்ளுக்கு ரூ.308 என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான காப்பீட்டு காலக்கெடு 16.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களான கத்தரிக்காய்க்கு ஏக்கருக்கு ரூ.1170, வெங்காயத்திற்கு ரூ.1782, தக்காளிக்கு ரூ.1495 என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, இவற்றிற்கான காப்பீட்டு காலக்கெடு 31.08.2024 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழைக்கு ஏக்கருக்கு ரூ.2939, மரவள்ளிக்கு ரூ.1720, மஞ்சளுக்கு ரூ.722 என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, இவற்றிற்கான காப்பீட்டு காலக்கெடு 16.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயிர்காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்திற்கான ஆவணங்களான சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகி காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து பாதுகாப்பு பெற இந்த திட்டம் உதவும் என்றும், மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...