சிங்காநல்லூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார்

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி கணபதி ராஜ்குமார், சிங்காநல்லூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்.பி., ஜூலை 18 அன்று சிங்காநல்லூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் பகுதி-1, சிங்காநல்லூர் பகுதி-2 ஆகிய பகுதிகளில் உள்ள வார்டு எண்கள் 54, 55, 56, 57, 58 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு கணபதி ராஜ்குமார் நன்றி தெரிவித்தார்.



இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.) தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பெற்ற வெற்றிக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கணபதி ராஜ்குமார், தொடர்ந்து மக்கள் நலனுக்காக உழைப்பதாக உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...