கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு

கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு இல்லை என்பதோடு, சிறப்புக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேரில் வருகை புரிவோருக்கு உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு காலத்திற்கு கணினி இயக்கம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் ரூ.750 உதவித் தொகை வழங்கப்படும்.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோமீட்டர் தொலைவு வரை இலவச பேருந்து அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 98651-28182, 94990-55692, 88381-58132, 94422-39112 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...