பொள்ளாச்சியில் சாலை விபத்தில் நீதிபதி உயிரிழப்பு: CCTV காட்சிகள் வெளியீடு

பொள்ளாச்சி உடுமலை சாலையில் நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


Coimbatore: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாம்பாளையம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் நடந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சாலையைக் கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நீதிபதி கருணாநிதி உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கிழக்கு காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையின் முடிவில், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கஞ்சம்பட்டி கே. நாகூரைச் சேர்ந்த வஞ்சிமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இக்காட்சிகளில், நீதிபதி கருணாநிதி சாலையைக் கடந்து வருவதும், வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதுவதும், அவர் நிலைதடுமாறி கீழே விழுவதும் தெளிவாகத் தெரிகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய வஞ்சிமுத்து, தனது இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...