சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.


கோவை: கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் போலீசார் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். பின்பு இருவருக்கும் சைபர் கிரைம் போலீசாரின் குற்றப்பத்திரிக்கை நகல் நீதிபதி முன்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு இருவரும் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர் கென்னடி செய்தியாளர்களிடம் பேசினார்.



அவர் கூறுகையில், "இந்த வழக்கில் ஒரே குற்றத்திற்கு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது சட்டத்திற்கு முரணானது. காவல்துறை அரசியலமைப்பை மீறி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து வழக்குகள் தாக்கல் செய்யக்கூடாது. ஆனால் அதை மீறி நடந்துள்ளது," என்றார்.

மேலும் அவர், "தமிழ்நாடு ஒரு போலீஸ் மாநிலமாக மாறி வருகிறது. அவசரமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதே போல அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும். 200 முதல் 300 போலீசார் வந்துள்ளனர், மக்களின் பணத்தை வீணாக செலவழிக்கின்றனர்," என்று குற்றம் சாட்டினார்.

"பல்வேறு கட்சியினர் அவதூறாக பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சீமான் கூட கொச்சையாக பேசியிருக்கிறார், அதைப் பற்றி காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை," என்றும் வழக்கறிஞர் கென்னடி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...