கோவையில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கேரளாவைச் சேர்ந்த 11 பேர் கைது

கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே உள்ள கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ஜூலை 17 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு குழுவினரை அவர்கள் கவனித்தனர்.

சந்தேகத்தின் பேரில் அந்தக் குழுவினரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை புதூரில் உள்ள வீடுகளில் கொள்ளை நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 11 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:

1. முகமத் யாதின் (வயது 40) - கேரளா, காசர்கோடு

2. சுனில் (வயது 45) - கேரளா, காசர்கோடு

3. அப்துல் கரீம் (வயது 47) - கேரளா, கண்ணூர்

4. சலீம் மாலிக் (வயது 25) - திருப்பூர் மங்கலம்

5. ஷாஜகான் (வயது 26) - திருப்பூர் மங்கலம்

6. சாமல் (வயது 46) - கேரளா, கண்ணூர்

7. நவ்பீல் காசிம் ஷேக் (வயது 29) - கர்நாடகா

8. முகமது யாசீர் (வயது 18) - திருப்பூர் காங்கேயம்

மேலும் மூன்று பேரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தக் குழுவில் இருந்த சரவணன் என்பவர் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...