உடுமலையில் வண்டல் மண் அனுமதி கோரி விவசாயிகள் போராட்டம்

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். வருவாய்த் துறையின் பாரபட்சம் குறித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதன்போது அதிகாரிகளுடன் வாக்குவாதமும் ஏற்பட்டது.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை, வாளவாடி, சாப்பிட்டியார்குளம் உட்பட பல்வேறு நீர் நிலைகளில் மாவட்ட நிர்வாகம் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியது.



ஆனால், வருவாய்த் துறையினர் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் கூறுகையில், "உடுமலை பகுதியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அரசின் விதிப்படி தேவையான ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தும் வருவாய்த்துறையினர் எந்த காரணமும் சொல்லாமல் விவசாயிகள் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். வண்டல் மண் எடுப்பதற்கு தொடர்ந்து பாரபட்சம் காட்டிக் கொண்டிருப்பதால், அனைவருக்கும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்," என்றனர்.

மேலும், "வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்," என அவர்கள் எச்சரித்தனர்.



பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், டிஎஸ்பி சுகுமாரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...