பக்தியில் ஊறி வளர்ந்த தமிழ் கலாச்சாரம்: தமிழ்நாடு தின வாழ்த்தில் சத்குரு

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு சத்குரு வெளியிட்ட வீடியோ வாழ்த்தில், பக்தியில் ஊறி வளர்ந்த தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில், பக்தியில் ஊறி வளர்ந்த தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சத்குரு தனது வாழ்த்து செய்தியில், "தமிழ் மண், தமிழ் கலாச்சாரம், தமிழ் இசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என எதை எடுத்தாலும், தமிழ் என்றால் பக்தி என்கிற ஒரு தெம்பு. பக்தியில்லாமல் தமிழ் கலாச்சாரம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "பக்தர்களின் நாடாக இருக்கின்ற தமிழ்நாட்டில், குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்து என்றாலும் பக்தி, வாழ்ந்தாலும் பக்தி, திருமணம் செய்தாலும் பக்தி, இறந்தாலும் பக்தி என்றே இருந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் கலாச்சாரத்தின் வளம் குறித்து பேசிய சத்குரு, "பக்தியிலேயே ஊறி வளர்ந்திருக்கும் இந்தக் கலாச்சாரம், நெஞ்சத்தில் இருக்கும் பக்தி என்ற தெம்பினால் எவ்வளவோ சாதனைகள் செய்திருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது" என்று பாராட்டியுள்ளார்.

தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பை எடுத்துரைத்த அவர், "சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மட்டுமில்லாமல் அனைத்திற்கும் மேலாக முக்கியமாக 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஒளவையார் போன்ற பக்தர்கள் பிறந்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது" என்று பெருமைப்பட்டுள்ளார்.

இறுதியாக, "தமிழ் மக்கள் இதை உணர்ந்து உலகம் முழுவதும் தீவிரமாக இந்த பக்தியை கொண்டு சேர்க்க வேண்டும். இது மிக மிகத் தேவையானது. தமிழ் கலாச்சாரத்தை குறித்து வெறுமனே பேசிப் பயனில்லை. நமக்கு அதில் பெருமை இருந்தால் அதனை உயிரோடு வைத்திருக்க வேண்டும்" என்று சத்குரு வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...