அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்: இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை நிரம்பியதால், பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித்துறை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது அமராவதி அணைக்கு வினாடிக்கு 7,000 கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருக்கிறது.



இதனால் அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரதான மதகுகள் வழியாக 2,000 கன அடியும், பிரதான கால்வாய் மூலம் 1,000 கன அடியும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கூடுதலாக உபரி நீரை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதனால் கரையோர கிராமங்களான கல்லாபுரம், கொழுமம், குமரலிங்கம், ருத்திரபாளையம், மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



பொதுப்பணித்துறை சார்பில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 87 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி ஆகும்.

அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அவசர காலங்களில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...