கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரப்பட்டது.


கோவை: கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளைக் கண்டித்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது.





31.10.2023 அன்று பொதுமக்கள் பயன்படுத்தும் புல எண் 37/3ல் உள்ள நத்தம் காலியிடத்தில் கற்கள் இட்டும், சுவர் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி (W.P.No. 28218/2021) காவல்துறை பாதுகாப்புடன் அகற்றி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், ஆக்கிரமிப்பு அளந்து எல்லைக்கல் இடப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால், ஆக்கிரமிப்பு செய்த நபர் அந்த காலியிடம் தனக்கு சொந்தமானது என கூறி, பொதுமக்கள் பயன்படுத்தினால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தல் செய்து பேனர் வைத்துள்ளார். இது பொதுப்பாதையை பயன்படுத்தும் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது.

05.07.2024 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆக்கிரமிப்பை முழுமையாக விரைவில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருக்குமரன் நகர், விஐபி நகர், மற்றும் சீனிவாசா நகர் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இன்றி பயன்படும் வகையில், சரியான முறையில் அளந்து எல்லைக்கல் இட்டு ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...