சூலூரில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்; பல்வேறு இடங்களில் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சூலூரில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை துவக்கி வைத்தார். பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜூலை 18) துவக்கி வைத்தார்.





தொடர்ந்து சூலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு பண்டக சாலை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.





பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுடன் பேசிய ஆட்சியர், அடிப்படை வசதிகள், மாணவர் சேர்க்கை, கற்றல் திறன் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.



மேலும் வகுப்புகளுக்கு நேரில் சென்று மாணவிகளைச் சந்தித்து பேசிய ஆட்சியர், ஸ்மார்ட் வகுப்பறையின் பயன்பாடு மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து உரையாடினார்.

கள ஆய்வின் இடையே ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "அரசு பள்ளிகள் CSR உதவியுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இணைய வசதி, உயர்தர ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன," என்றார்.

தென்மேற்கு பருவமழை குறித்து பேசிய ஆட்சியர், "கோவை மாவட்டத்தில் மழை சீராக பெய்து வருவதால் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. வால்பாறை பகுதியில் மட்டும் தொடர் கனமழை, மண்சரிவு உள்ளிட்ட காரணங்களுக்காக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் அதிக அளவில் நீர் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக நீர் நிலைகளில் குளிக்க செல்வது, அருகே சென்று செல்ஃபி எடுப்பது, விளையாடுவது உள்ளிட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசார் மூலம் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தி வருகிறோம்," என்று கூறினார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...