கோவையில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி விற்பனை செய்த 4 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி விற்பனை செய்த 4 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் ஆனந்தகுமார்(47), பூபதி மகன் செந்தில்குமார் (40), உத்மான் மகன் முகமது யூசுப் (21) மற்றும் கருப்புசாமி மகன் கார்த்திக் (21) ஆகியோர்களை கடந்த 23.06.2024 அன்று பேரூர் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வுத்தரவின் அடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக வெளி மாநில மதுபானங்களை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கு குற்றவாளிகளான ஆனந்தகுமார் (47), செந்தில் குமார் (40), முகமது யூசுப் (21) மற்றும் கார்த்திக் (21) ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 43 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...