மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி கோவை சிறு, குறு தொழில் அமைப்பினர் வலியுறுத்தல்

கோவை கொடிசியா வளாகத்தில் சிறு, குறு தொழில் அமைப்புகள் கூட்டம் நடத்தி, மின்கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதித்தனர். நிலைக்கட்டணம் குறைப்பு, பழைய கட்டண முறை மீண்டும் அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.


கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் பல்வேறு சிறு, குறு தொழில் அமைப்புகள் சார்பில் தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.





இக்கூட்டத்தில் மின்சார கட்டண உயர்வால் தொழில்துறையினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.





கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொடிசியா மற்றும் சிறு குறு தொழில் அமைப்பினர், தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ள மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும், பழைய மின் கட்டண முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தொழில்துறையினருக்கான நிலைக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பழைய கட்டண முறையின்படி நிலை கட்டணம் 35 ரூபாயாக இருந்தபோது தொழில்துறையினர் பலனடைந்து வந்ததாகவும், தற்போது 160 ரூபாயாக நிலை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் வளர்ச்சி தடைபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கோவையின் பிரதான உற்பத்தி தொழிலாக உள்ள பம்ப் உற்பத்தி மற்றும் அது சார்ந்த பவுண்டரி தொழில்கள், மழைக்காலத்தில் சரிவை சந்தித்து வரும் சூழலில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் இருக்கும்போதும் நிலை கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றனர். இது சிறு, குறு தொழில்களை மேலும் நலிவடையச் செய்யும் எனவும், எனவே நிலை கட்டணத்தை பழைய படி அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும், சூரிய தகடு மின்சார உற்பத்திக்கு நெட்வொர்க்கிங் சார்ஜஸ் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் எனவும் தொழில் துறையினர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விவரிக்க உள்ளதாகவும் கொடிசியா மற்றும் தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...