கோவை தொழிலதிபரிடம் ரூ.9.14 கோடி மோசடி: வழக்கறிஞர்கள் மீது வழக்கு

கோவையில் தொழிலதிபர் ஜேம்ஸிடம் ரூ.9.14 கோடி மோசடி செய்த வழக்கறிஞர்கள் ராஜேஷ் மற்றும் ஆனந்தி மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து ஏலம் மற்றும் பிட்காயின் முதலீடு என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது.


Coimbatore: கோவை ராம்நகர் காளிதாஸ் வீதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜேம்ஸ், பீளமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோரால் ரூ.9.14 கோடி மோசடிக்கு ஆளானார். இது தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரு வழக்கு விஷயமாக வழக்கறிஞர்களை அணுகிய ஜேம்ஸ், பின்னர் அவர்களுடன் நட்பாக பழகி வந்தார். இந்நிலையில், நீதிமன்றத்தில் ஏலத்திற்கு வரும் சொத்துக்களை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று வழக்கறிஞர்கள் ஆசை வார்த்தைகள் கூறினர். இதனை நம்பிய ஜேம்ஸ், சொத்துக்களை வாங்குவதற்காக பல தவணைகளில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார்.

மேலும், ஆனந்தி தான் நீதிபதி தேர்வுக்கு பயிற்சி பெற்று வருவதாகவும், வேலையில் சேர்வதற்கு ரூ.25 லட்சம் வேண்டும் என்றும் கூறி ஜேம்ஸிடம் பணம் பெற்றுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு பெற்ற வழக்கறிஞர்கள், ஜேம்ஸிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறினர்.

இதனை நம்பிய ஜேம்ஸ், ரூ.8 கோடி 64 லட்சத்து 90 ஆயிரத்தை முதலீடு செய்தார். நீண்ட நாட்கள் ஆகியும் லாபம் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ், வழக்கறிஞர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

மொத்தம் ரூ.9 கோடியே 14 லட்சத்தை இழந்த ஜேம்ஸ், இது குறித்து ஜூலை 17 அன்று பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...