ஆழியாறு அணை நீர்மட்டம் 106 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 106 அடியை எட்டியுள்ளது. தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 106 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆழியார் நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆழியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 முதல் 5 அடி வரை ஆழியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.



120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 101.10 அடியாக இருந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு 3,709 கன அடி நீர்வரத்து உள்ளதாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...