மின்கட்டண உயர்வால் குறு, சிறு தொழில்கள் பாதிப்பு: முதல்வரிடம் தொழிலதிபர்கள் கோரிக்கை

தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொழிலதிபர்கள் எச்சரிக்கின்றனர்.


Coimbatore: தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபர்கள் கூறியுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


2022ஆம் ஆண்டில் தமிழக மின்சார வாரியம் நிலைக் கட்டணத்தை 1 கிலோவாட்டுக்கு 35 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக (430 சதவீதம்) உயர்த்தியது. மேலும் பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணத்தையும் 20 சதவீதம் உயர்த்தியது. இந்த உயர்வால் பாதிக்கப்பட்ட 420 தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து மின்கட்டணத்தை குறைக்கக் கோரி 8 கட்ட இயக்கங்களை நடத்தியதாக தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.


தமிழக முதல்வர் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நிலைக் கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் தற்போது மின்சார வாரியம் மீண்டும் 4.83 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல உள்ளதாக தொழிலதிபர்கள் வருத்தம் தெரிவித்தனர்.


தமிழ்நாட்டில் 97 சதவீத குறு, சிறு தொழில்கள் ஜாப் ஆர்டர்களாகவும், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களாகவும் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை 8 சதவீதம் கூட லாபம் இல்லாமலும், நிலையான ஆர்டர்கள் இல்லாமலும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் மின்கட்டணத்தை உயர்த்துவது தொழில்துறையினர் மீது பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறினர்.


இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், உள்ளூரிலும் வேலைவாய்ப்பு வழங்கி வரும் குறு, சிறு தொழில்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் தொழிலதிபர்கள் எச்சரித்தனர்.


எனவே, தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் குறு, சிறு தொழில்களைப் பாதுகாக்க உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஏற்கனவே உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தையும் திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...