கோவையில் அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கோவை மாநகராட்சியின் 84வது வார்டில் அடிப்படை வசதிகள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை வசதிகள் கோரி போராட்டம் நடத்தினர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84வது வார்டில், அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு செய்வதற்காக வந்த அரசு அதிகாரிகளை, குடியிருப்பு வாசிகள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியின் 84வது வார்டில் உள்ள ஜிஎம் நகர், கோட்டை புத்தூர் ஜமீன்தார் நகர், வைரம் நகர், வீரபாண்டி நகர், கல்லுக்குழி, சன் கார்டன், என்எஸ் கார்டன், ரோஜா கார்டன், காந்திநகர், ஜன்னத்துல் பிர்தௌஸ் கார்டன், கேஎஸ் பார்க் போன்ற பகுதிகளில் சாலை வசதி, மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.



இந்நிலையில் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இன்று நேரில் வந்தனர். அப்போது அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட குடியிருப்பு வாசிகள், அவர்களை கையோடு அழைத்துச் சென்று சேதமடைந்த சாலைகள் மற்றும் கால்வாய்களை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் 88வது வார்டு எஸ்டிபிஐ கவுன்சிலர் வீட்டின் முன்பாக பொதுமக்கள் கூடவே, அங்கு கவுன்சிலரின் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிப்படை வசதிகள் அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...