உடுமலை அருகே திருமூர்த்திமலையில் வெள்ளம் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை பயிற்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் உள்ள அமண லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மேலும், வெள்ள பெருக்கு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த ஒத்திகை பயிற்சியில் கோவில் செயல் அலுவலர் அமரநாதன், கோவில் ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பங்கேற்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தத்ரூபமாக இருந்ததால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இடையே ஒருவித அச்சம் ஏற்பட்டது. பின்னர் இது ஒத்திகை பயிற்சி என்று தெரிந்ததும் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த பயிற்சி மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதும், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...