கோவை வைகை நகரில் புதிய நியாய விலைக் கடை திறப்பு: எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்பு

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, 90வது வார்டு வைகை நகரில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது. பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் கடையை திறந்து வைத்தனர்.


Coimbatore: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, கோவைப்புதூர் 90வது வார்டில் உள்ள வைகை நகரில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த கடை திறக்கப்பட்டுள்ளது.

புதிய நியாய விலைக் கடையை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமியுடன் இணைந்து கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இன்று (ஜூலை 19) திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் மூ.ராஜேந்திரன், கழகத் தீர்மான குழு இணை செயலாளர் மு.முத்துசாமி, வட்ட கழக செயலாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.



இந்த புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா, வைகை நகர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் எளிதாக அத்தியாவசிய பொருட்களை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...