நீட் தேர்வு இல்லாமல் மருத்துவப் படிப்பு: கோவையில் கோடிக்கணக்கில் மோசடி

கோவை சிங்காநல்லூரில் KSG அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற பெயரில் சட்டவிரோத மருத்துவக் கல்லூரி இயங்கி வந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் 60 லட்சம் வரை கட்டணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் KSG அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக மருத்துவக் கல்லூரி இயங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரி மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் வழக்கறிஞருடன் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர்.



இது குறித்து வழக்கறிஞர் ஜான்லி கூறுகையில், "நீட் நுழைவுத் தேர்வு இல்லாமல், மூன்று ஆண்டுகள் கோவையில் மருத்துவ படிப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் மருத்துவ பயிற்சி என்று ஆசை வார்த்தை கூறி, கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏமாற்றியுள்ளனர். கிராமப்புற மாணவர்களை குறிவைத்த இந்த நிறுவனம், மாணவர்களிடம் இருந்து 60 லட்சம் வரை கட்டணமாக வசூலித்துள்ளனர்" என்றார்.

2014 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வந்த இந்த கல்லூரியில் நடந்த மோசடி 2019 ஆம் ஆண்டில்தான் வெளிச்சத்திற்கு வந்தது. 2021 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரிடமும் அவரது மகன் மருத்துவம் படிக்க உதவுவதாக கூறி ஐம்பது லட்சம் ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்த மருத்துவக் கல்லூரி இயங்கி வந்ததாகவும் தெரிகிறது.



கீதா என்பவர் இந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும், சாந்தனு என்பவர் அவருக்கு உதவியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்த்து விடுவதாக கூறிவிட்டு, பின்னர் சந்தேகம் வந்ததும் அமெரிக்க கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு மருத்துவப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி மாணவர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த மோசடியில் மொத்தம் 30 கோடி ரூபாய் வரை கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...