உடுமலை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் - வனத்துறையினர் இடையே வாக்குவாதம்

உடுமலை அருகே காட்டு யானைகள் அட்டகாசம், தெளிப்பு நீர் பாசன மானியம் நிறுத்தம், வெண்பட்டுக்கூடு உற்பத்தி பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவாதம். வனத்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் அரசு கலைக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் தங்கள் குறைகளை முன்வைத்தனர்.

தெளிப்பு நீர் பாசனத்திற்கான மானியம் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும், திருமூர்த்தி மலை, பொன்னால் அம்மன் சோலை, வளைய பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் யானைகள் விளைநிலங்களில் புகுந்து சேதம் விளைவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த வனத்துறை அதிகாரி, யானைகள் அப்பகுதியில் வருவதில்லை என்றும், மாற்று இடத்திற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். இது விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.

வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அரசு மையங்களில் இருந்து வாங்கப்படும் முட்டைகள் வீரியமற்றதாக உள்ளதாகவும், தனியார் இளம்புழு மையங்கள் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாததால் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.



கண்ணமநாயக்கனூர், சின்ன வீரன் பட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஆடுகள், கன்றுக்குட்டிகள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டனர்.

கோவில் நிலங்கள் ஏலம் விடப்படுவது போல, தரிசு கோவில் நிலங்களையும் ஏலத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும், வண்டல் மண் எடுப்பதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

குடிமங்கலம் ஒன்றியம் சிந்திலுப்பு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற விவசாயி, 2021ல் விவசாயத்திற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தும், இன்னும் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தார்.

உடுமலையிலிருந்து மறையூர் பகுதிக்கு ஜீப்புகளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தில் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், மடத்துக்குளம் வட்டாட்சியர், காவல்துறை, வேளாண்மைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...