ஆடி முதல் வெள்ளி: தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பல மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோயில் தனது சிறப்பு மிக்க வழிபாடுகளுக்காக பெயர் பெற்றது.

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை 19) வனபத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.

அதிகாலை முதலே கோயிலின் முன் நீண்ட வரிசை காணப்பட்டது. பக்தர்கள் பொறுமையுடன் தங்கள் முறை வரும் வரை காத்திருந்தனர். கோயிலுக்குள் நுழைந்த பக்தர்கள் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு ஆசி பெற்றனர். சிலர் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...