கோவை தடாகம் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம்: குடியிருப்பு வாசிகள் வீடியோ பதிவு

கோவை தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். வனத்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பேரூர், தொண்டாமுத்தூர், நரசீபுரம், தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை கோழி, ஆடு, மாடு போன்ற வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி சென்றதாக தகவல் வெளியானது.



கடந்த வாரம் தொண்டாமுத்தூர் வண்டிக்காரன் புதூர் பகுதியில் வளர்ப்பு ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி சென்றதாக தகவல் வெளியான நிலையில், வனத்துறையினர் நவீன கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால், அதில் எந்த காட்சியும் பதிவாகவில்லை.



தற்போது, தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வனத்துறையினர் சமீப காலமாக இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...