முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு: திருப்பூர் பாஜக நிர்வாகி கைது

கோவை சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவரை முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு பரப்பியதற்காக கைது செய்தனர்.



கோவை: à®•ோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவரை முகநூலில் முகமது நபிகள் பற்றி அவதூறு பரப்பியதற்காக கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் ஜூலை 19 அன்று தமுமுக கோவை மத்திய மாவட்டத் தலைவர் சர்புதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அதில், "குன்னத்தூர் முதல்வர்" என்ற முகநூல் கணக்கில் இஸ்லாமியர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கின்ற முகமது நபிகள் (ஸல்) பற்றியும், இஸ்லாமிய தலைவர்கள் பற்றியும் கொச்சையாகவும் கீழ்த்தரமாகவும் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவுகளை வெளியிட்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் புகாரில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவதூறு பதிவுகளை வெளியிட்டவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஊடகப் பிரிவு மண்டல தலைவர் நந்தகுமார் (32) என்பது தெரியவந்தது.

நேற்று மாலை, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நந்தகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவரைக் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...