கோவையில் ஆடிட்டரை கடத்தி 10 லட்சம் பறித்த மூவர் கைது; ஒருவர் தலைமறைவு

கோவையில் ஆடிட்டர் பின்சி லாசரஸ் போஸை கடத்தி 10 லட்சம் ரூபாய் மற்றும் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய சூத்திரதாரி பிருந்தா தலைமறைவாக உள்ளார்.


கோவை: கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஆடிட்டர் பின்சி லாசரஸ் போஸ் (48) கடந்த மாதம் தனது முகநூல் பக்கத்தில் ஹோட்டல்கள் குத்தகைக்கு தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதைப் பார்த்த பிருந்தா என்பவர் தொடர்பு கொண்டு, தேனி மாவட்டத்தில் மலைப் பகுதியில் ஹோட்டல் ஒன்று குத்தகைக்கு இருப்பதாகக் கூறினார்.

பிருந்தாவின் கோரிக்கையின் பேரில், பின்சி லாசரஸ் போஸ் 10 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து கொண்டார். நேற்று முன்தினம், பிருந்தாவின் நண்பர்கள் என்று கூறப்பட்ட மூன்று நபர்களுடன் பின்சி லாசரஸ் போஸ் காரில் புறப்பட்டுச் சென்றார்.

ஜீவா நகர் பகுதியில் உள்ள காலி இடத்தின் அருகே காரை நிறுத்திய அந்த மூவரும், கத்தியைக் காட்டி மிரட்டி பின்சி லாசரஸ் போஸிடமிருந்த 10 லட்ச ரூபாய் பணத்தையும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 4¼ பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டனர். பின்னர் அவரை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து பின்சி லாசரஸ் போஸ் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (38), அஸ்வின் (29) மற்றும் கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜின்சன் (37) ஆகிய மூவரையும் நேற்று (ஜூலை 19) காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணம், 4¼ பவுன் தங்கச் சங்கிலி, மூன்று கைபேசிகள், கத்தி மற்றும் ஆடிட்டரை கடத்தப் பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான பிருந்தா தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...