அமராவதி அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் 87.80 அடியாக உயர்ந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான தூவானம் அருவியில் இரண்டாவது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது அமராவதி அணைக்கு வினாடிக்கு 4,686 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.



அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 4,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், மறையூர், காந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், கரையோர கிராமங்களான கல்லாபுரம், ருத்ராபாளையம், கொழுமம், மடத்துக்குளம், காரத்தொழுவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அமராவதி அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 87.80 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...