கோவை மாநகராட்சி ஆணையர் கேரளாவில் உள்ள சிறுவாணி அணையை ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா சிவகுரு பிரபாகரன் கேரளாவில் உள்ள சிறுவாணி அணையை ஆய்வு செய்தார். அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் இன்று (20.07.2024) கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.



இந்த ஆய்வு பயணத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செல்லமுத்து, செயற்பொறியாளர் (சிறுவாணி அணை) மீரா, மாநகர துணை தலைமை பொறியாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், கேரளா மாநில நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...