பெல்ஜியம் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிக் கோப்பை வென்ற கோவை சிறுமி மேஹாவுக்கு உற்சாக வரவேற்பு

பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி பதக்கங்கள் வென்று வெள்ளிக் கோப்பையை வென்ற கோவை சிறுமி மேஹாவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்ப்லாண்டர் கிராண்டு பிரிக்ஸு 2024 ஸ்கேட்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த சிறுமி மேஹா சிறப்பாக செயல்பட்டு வெள்ளிக் கோப்பையை வென்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த அருண் சக்தி மற்றும் வித்யா சம்பத் தம்பதியரின் மகளான மேஹா, இந்த சர்வதேச போட்டியின் ஆறு சுற்றுகளில் பங்கேற்றார்.



அதில் மூன்று சுற்றுகளில் தங்கப் பதக்கமும், மற்ற மூன்று சுற்றுகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். ஒட்டுமொத்த போட்டியின் முடிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிக் கோப்பையை வென்றார்.

நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி மேஹா, சிறு வயதிலேயே சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து பங்கேற்றவர்களில் இரண்டு பேர் மட்டுமே இந்த ஸ்கேட்டிங் போட்டியில் கோப்பை வென்றுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இவ்விருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கோயம்புத்தூரில் 33 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை இந்த சர்வதேச போட்டியில் பதக்கம் வெல்வது கனவாகவே இருந்தது. இந்நிலையில், சிறுமி மேஹா வெள்ளிக் கோப்பையை வென்று வந்தது ஸ்கேட்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிக் கோப்பையுடன் கோவை திரும்பிய மேஹாவுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள் பூங்கொத்து வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். எதிர்காலத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக கோப்பைகளை வென்று தருவதே தனது இலக்கு என மேஹா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் போட்டியாளர்கள் கோப்பையை வெல்ல முடியும் என பயிற்சியாளர் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...