பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் உயர துவங்கி கடந்த நான்கு நாட்களுக்கு முன் அணையின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. தற்போது அணைக்கு வினாடிக்கு 10,120 கன அடி வரை நீர்வரத்து உள்ளதால் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில், பவானியாற்றங்கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்தாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை இன்று ஜூலை 20 அன்று விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலங்களில் உடனடியாக உதவி பெற 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...