பொள்ளாச்சி ஆனைமலையில் நெல் நடவுப் பணிகள் தீவிரம்; விலை குறைவால் விவசாயிகள் வேதனை

ஆனைமலையில் முதல் போக நெல் சாகுபடிக்கு நடவுப் பணிகள் தீவிரம். உரம் விலை உயர்வு, குறைந்த விலை காரணமாக நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. விவசாயிகள் நிரந்தர கொள்முதல் நிலையம் கோருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடிக்கான நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



ஆழியார் அணை பாசனத்தின் மூலம் தென்னை, வாழை மற்றும் நெல் சாகுபடி செய்யப்படும் இப்பகுதியில், முன்பு 6,400 ஏக்கரில் இருந்த நெல் சாகுபடி தற்போது 3,400 ஏக்கராக குறைந்துள்ளது.



விவசாயிகள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பருவமழை உரிய நேரத்தில் பெய்திருந்தாலும், ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



மேலும், கூலி ஆட்கள் பற்றாக்குறை, உர விலை உயர்வு மற்றும் நெல்லுக்கு சரியான விலை கிடைக்காமை ஆகியவை நெல் சாகுபடி குறைவதற்கான காரணங்களாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விலை நிர்ணயம் குறித்தும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,800 வழங்கப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் ரூ.2,200 மட்டுமே கிடைப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஆனைமலை பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே அமைக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...