பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் 70 பேர் கைது: இந்து கோயில்கள் தொடர்பான கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் இந்து கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர். வழிபாட்டு கட்டணம் ரத்து, கோயில் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.



தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி பொள்ளாச்சி மத்திய தொலைத்தொடர்பு நிலையம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கோயில்களில் வழிபாட்டு கட்டணத்தை ரத்து செய்யக் கோரினர்.



மேலும், இந்து கோயில்களுக்கு பராமரிப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.



தமிழக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...