உடுமலைப்பேட்டை: அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு - மலைவாழ் மக்கள் அவதி

உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அத்தியாவசிய தேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், மறையூர், காந்தளூர், கூட்டாறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

கூட்டாறு வழியாக தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழான வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.



தற்போது, கடந்த சில நாட்களாக கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசரகால சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் சமவெளிப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



மேலும், தற்போது சிறு படகு மூலம் கூட்டாற்றைக் கடக்க வேண்டிய அபாயகரமான சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீர்மட்டம் மேலும் உயரும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் மலைவாழ் மக்கள் அவதிப்படும் நிலையில், கூட்டாற்றைக் கடக்க மரப்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டாறு பகுதியில் ஆய்வு செய்து, தற்காலிக மரப்பாலம் அமைத்து தர வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



இதற்கிடையே, அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், வினாடிக்கு 2,800 கன அடி நீர் வரத்து உள்ளது.



அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக 2,325 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்சமயம் அமராவதி அணையின் நீர்மட்டம் 90 அடி கொள்ளளவில் 88.19 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...