உடுமலையில் இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: வனத்துறையினர் மீட்பு

உடுமலை நேரு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய விவசாயியின் இருசக்கர வாகனத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்துள்ளது. வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி பாம்பை மீட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலையான நேரு வீதியில் தனியார் மருத்துவமனை, அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த பரபரப்பான பகுதியில், ஒரு விவசாயி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

சிகிச்சை முடிந்து திரும்பும் போது, அவரது இருசக்கர வாகனத்தில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.



வாகனத்தில் புகுந்திருந்த பாம்பை மீட்க வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடினர்.



இறுதியில் மீட்கப்பட்ட பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. பின்னர், பிடிக்கப்பட்ட பாம்பை அடர்ந்த வனப் பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

தற்போது பருவ மழைக்காலம் என்பதால், சாலையின் இரு ஓரங்களிலும் பூக்கள் மற்றும் செடிகள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இதனால் பாம்பு மற்றும் தேள்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வாகன ஓட்டிகள் புதர்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும், வாகனங்களை இயக்கும் முன்பு கவனமாக பரிசோதித்து விட்டு பயணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...