பல்லடம் அருகே அடிப்படை வசதிகளுக்காக பொதுமக்கள் சாலை மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வண்ணாந்துறை புதூரில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் காங்கேயம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நாச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாந்துறை புதூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெரு விளக்கு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்துள்ளனர்.

கிராம சபை கூட்டங்களிலும் இது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று காலை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் காங்கேயம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜிகுமார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பேசுவதாக உறுதியளித்தார். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் காங்கேயம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...