சூலூர் அருகே தலையில் காயங்களுடன் இளைஞர் சடலம் மீட்பு: மது போதையில் கொலையா என விசாரணை

கோவை சூலூர் அருகே காட்டுப்பகுதியில் தலையில் காயங்களுடன் 28 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஓடக்கல்பாளையத்தில் காட்டுப்பகுதியில் தலையில் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் பரமசிவம் (28) என்பது தெரியவந்தது. பரமசிவம் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தவர் என்றும், சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.



மேலும், இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, பரமசிவத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், நண்பர்களுடன் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பரமசிவம் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...