உடுமலை அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

உடுமலை அருகே குட்டியகவுண்டனூர் கிராம மக்கள் 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், உடுமலை பிரதான சாலையில் காலி குடங்களுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சாலைமறியல் போராட்டம் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித் துறை குடிநீர் வழங்கல் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குட்டியகவுண்டனூர், உரல்பட்டி, ஆண்டியகவுண்டனூர், ஜக்கம்பாளையம், கிழவன்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், "சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக குடிநீர் வழங்கினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம்" என்று தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தால் உடுமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...