உடுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், நாய் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

1. பாரம்பரிய யானை வழித்தடங்களை விடுத்து புதிய வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டாம்.

2. சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும்.

3. காட்டு பன்றி, குரங்கு, மான், மயில்களால் விவசாய பயிர்கள் நாசமாவதை தடுக்க வேண்டும்.

4. கேரள அரசைப் போன்று பன்றிகளை கட்டுப்படுத்த வாய் வெடி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.



5. வனவிலங்குகளால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் சேதமாகும் பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

6. கிராமப்புறங்களில் நாய்களால் உயிரிழக்கும் ஆடு, கன்றுகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

7. நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ் ஆர் மதுசூதனன், மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, மாவட்ட துணைத்தலைவர் எஸ் பரமசிவம், மடத்துக்குளம் தாலூகா செயலாளர் வீரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...