நிபா வைரஸ் அச்சம்: கோவை-கேரளா எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக, கோவை-கேரளா எல்லையில் 11 சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். பயணிகள் காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


Coimbatore: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து, கோவை-கேரளா எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும் 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை-கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் பொதுமக்கள் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், நிபா வைரஸ் பாதிப்பு குறையும் வரை தமிழக மக்கள் கேரள மாநிலத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...