கோவை சிங்காநல்லூர் அருகே சுடுகாட்டில் சேவல் சண்டை சூதாட்டம்: 6 பேர் கைது

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இரண்டு சேவல்கள் மற்றும் ரூ.7,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் தலைமையிலான போலீஸ் குழுவினர் ஜூலை 21 மாலை அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடிக் கொண்டிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிங்காநல்லூர் ராஜலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45), தங்கவேல் (42), சிட்கோ நாகராஜபுரம் சுரேஷ் (49), கள்ளிமடை கருப்புசாமி (38), விக்னேஸ்வரன் (32) மற்றும் மனோஜ் குமார் (20) ஆகியோர் ஆவர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 சேவல்களும், சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ரூ.7,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...