கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைப்பு: லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி மக்கள் அவதி

கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்த தண்ணீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


கோவை: கோவை பெட்டதாபுரம் அருகே ராட்சச குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை வடவள்ளி - கவுண்டம்பாளையம் - தொண்டாமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் 2வது ஸ்கீமில் பில்லூர் அத்திகடவு குடி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் செல்ப்பனூர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சச குழாய் மூலமாக பெட்டதாபுரம், வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்கிறது.



பெட்டதாபுரம் அருகே ராட்சச குழாயில் பிளவு ஏற்பட்டு கடந்த ஒரு மாதம் காலமாக குடிநீர் கசிந்து சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.



தற்போது ராட்சச குழாயின் பிளவு பெரிதாகி உடைந்ததால் குடிநீர் வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.



வெளியேறும் நீர் அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...