கோவை: வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ஆய்வு

கோவை மாநகராட்சி 27வது வார்டில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 27வது வார்டு பீளமேடு கிரி அம்மன் கோயில் வீதியில் உள்ள அமுதம் நியாய விலை கடை (எண்.26) இன்று (ஜூலை 22) வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் பொதுமக்களிடம் பொருட்கள் சரியாக கிடைக்கின்றதா என்று கேட்டறிந்தார்.



அதே வார்டின் பீளமேடு கிரி அம்மன் கோயில் வீதி 3, ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி இன்று (ஜூலை 22) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியையும் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



சாக்கடை முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் கவுன்சிலர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களிடம் குப்பைகளை சாக்கடைக்குள் போட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...