தாராபுரம் அருகே அமைச்சர் கயல்விழி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் கயல்விழி ரூ.1.05 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் தானிய கிடங்கு மற்றும் சமுதாய நலக்கூடம் அடங்கும்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தார்.

குங்குமம்பாளையம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தானிய கிடங்கை அமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல், புது ஐயப்பநாயக்கன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தையும் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராணா பத்மநாபன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, நந்தவனம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி நாச்சிமுத்து, வேலாயுதம் பாளையம் பஞ்சாயத்து தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...