நீலகிரியில் ஊட்டி-குன்னூர் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து: மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதம்

நீலகிரியில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஊட்டி-குன்னூர் மலை ரயில் பாதையில் மரங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜூலை 22 முதல் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஊட்டி - குன்னூர் மலை ரயில் பாதையில் தண்டவாளத்தில், பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக குன்னூர்-ஊட்டி இடையே இயங்கும் மலை ரயில் சேவை ஜூலை 22 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலை ரயில் பாதையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மரங்களை அகற்றும் பணிகள் விரைவில் நிறைவடைந்து மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி-குன்னூர் மலை ரயில் பயணம் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா கவர்ச்சிகளில் ஒன்றாகும். இந்த ரயில் சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பை சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...