வால்பாறையில் மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து பரிதாப உயிரிழப்பு

வால்பாறையில் மின் கம்பத்தில் பணியாற்றிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் கருப்பசாமி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: வால்பாறையை அடுத்த வாகமலை எஸ்டேட்டைச் சேர்ந்த கருப்பசாமி (அ) கண்ணன் (45) என்பவர் வால்பாறை மின்வாரியத்தில் நிரந்தரப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

ஜூலை 22 அன்று, புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை சரிசெய்ய, மின்மாற்றியிலிருந்து மின் இணைப்பைத் துண்டிக்கச் சென்றார் கருப்பசாமி. பணி முடிந்த பின்னர், மின்மாற்றியிலிருந்து மின் கம்பங்களுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க கம்பியை இழுத்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.

இதில் கருப்பசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர் பரிசோதனையில் கருப்பசாமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் ஊழியர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மின்வாரியம் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...