குனியமுத்தூர், மயிலம்பட்டி, மலையடிப்பாளையம் துணைமின் நிலையங்களில் நாளை மின்தடை

கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர், மயிலம்பட்டி மற்றும் மலையடிப்பாளையம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர், மயிலம்பட்டி மற்றும் மலையடிப்பாளையம் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலம்பட்டி துணைமின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி, ஆன்டக்காபாளையம், கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), சிட்ரா (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

குனியமுத்தூர் துணைமின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

சுல்தான்பேட், மலையடிப்பாளையம் துணைமின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மலையடிப்பாளையம், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இந்த மின்தடை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிக்கும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...