கோவை போத்தனூர் உலர் பழ வியாபாரி வீட்டில் ரூ.2.35 லட்சம் கொள்ளை

கோவை போத்தனூரில் உலர் பழ வியாபாரி வீட்டில் ரூ.2.35 லட்சம் பணம், 3 கைக்கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் திருமண விழாவிற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை போத்தனூரைச் சேர்ந்த உலர் பழ வியாபாரி முகமது இஸ்மாயில் (வயது 46) வீட்டில் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

முகமது இஸ்மாயில் கடந்த ஜூலை 19ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சேலத்தில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சென்றுள்ளார். ஜூலை 22ஆம் தேதி திரும்பி வந்த போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் பணம், 3 கைக்கடிகாரங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. இது குறித்து முகமது இஸ்மாயில் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...