மேட்டுப்பாளையம், காரமடையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், காரமடை பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதேபோல், காரமடை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மேலும், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரின் கோரிக்கையை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆய்வின்போது மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...