கோவையில் திமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வு கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) அவர்கள் இன்று (23.07.2024) செவ்வாய்க்கிழமை, புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.



இந்த நிகழ்வு முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.



வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வார்டு எண்கள் 36, 37, 38, 39, 40 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களான விஸ்வநாதன், கா.வேலுச்சாமி, தெய்வம் மகாலட்சுமி, பாலகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரிடம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி புஷ்பராஜ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாநகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், நெசவாளர் அணி அமைப்பாளர் வி.மணி, இலக்கிய அணி அமைப்பாளர் ராஜ்குமார், முரசொலி வெங்கடகிரி, அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருதமலை மகேஷ்குமார், சின்னதங்கம், பகுதிக்கழக, வட்டக்கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...